தமிழ் ஆண்டுகள்

Posted on at


 

தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமசுகிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.

இந்த வடமொழிப் பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?


தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே, வடமொழிப் பெயர்களும் அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வடமொழிப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல்

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்



About the author

ramchandran-balasubramaniyan

Ram is a civil engineer by profession.
he's passionate towards film making

Subscribe 0
160